A budding photographer's blog!

Archive for February, 2012

Mohan Prabu

Mohan Prabu by Varnajaalam @ Rajanna
Mohan Prabu, a photo by Varnajaalam @ Rajanna on Flickr.

கோபமா பாக்குறான்னு நினைக்காதிங்க.. அவன் ரொம்ப நல்லவன்.

Advertisements

Vignesh chandran

என் தம்பி..

Mushroom – காளான்

மழைத் துளி விதைகளில்
விழித்தெழும் காளான்கள்
மர அடிவாரங்களில்
மழை விட்டபின் குடைவிரிக்கும்

எந்த காளான் நல்லதென்று
தொட்டுப் பார்த்தும்,
கிள்ளிப் பார்த்தும்
வடிவம் பார்த்தும்
அடிப்பாகத்தின் நிறத்தைப் பார்த்தும்
பட்டென சொல்வார்
ஞானம்மா பாட்டி.

எந்த மரத்தடியில்
நல்ல காளான் முளைக்குமெனும்
காளான் வரலாறு
பாட்டிக்கு அத்துப்படி.

தாவர ஈசலாய்
தலைநிமிரும் காளான்கள்
பசிக்கும் கிராமத்துக்கு
இலவச உணவாகும்.

ரப்பர் பால் கசியும்
கிராமத்து மண் வெளிகளில்
இப்போதெல்லாம்
காளான்கள் முளைப்பதில்லை.

நகரத்திலோ,
பூவா, இலையா, செடியா
இதுவென
யோசித்துக் குழம்பும்
தற்காலத் தலைமுறைக்கு
காளான் என்பதே
காதால் கேளாத பெயர்ச்சொல்.

அவர்களுக்குத்
தெரிந்ததெல்லாம்
ஃபுட் வேல்ட்களின்
பாலிதீன் பைகளில் மூச்சுத் திணறும்
பாவப்பட்ட
“மஷ்ரூம்”கள் மட்டுமே.

– xavi.wordpress.com/2008/12/10/mushroom/

Choondipaara waterfalls

மேகக் காதலர்கள்
மலைச்சிகரக் காத‌லிகளை
கிள்ளிச் செல்ல,
நாணுகின்ற சிகரங்கள்
இடைக்கச்சைகளை
நழுவ விடுகின்றன
நீரோடைகளாய்…

வேகமாய்க் க‌ட‌ந்து போகும்
மேக‌ங்க‌ளுட‌ன்,
நீராய் முன்னே விழ‌ப்போவ‌து
முத‌லில் யாரென்று
போட்டியிடுகின்றன,
மூலைமுடுக்கிலிருந்தெல்லாம்
பாய்ந்தோடிவ‌ரும் நீரோடைக‌ள்…

வ‌யிற்றில் சும‌ந்த‌
பிள்ளைக‌ளை
கீழே இற‌க்கி விட்டுப்
பிள்ளைகள் ஓடி விளையாடுவதை
நின்று ரசிக்கிறாள்
தாயானவள் இந்த நீர்வீழ்ச்சி…

– ‍ராம்ப்ரசாத் கவிதைகள்
ramprasathkavithaigal.blogspot.in/2010/03/blog-post_7120….

அலைகடல்

“ஆறுகள் அனைத்தையும் அலைகடல் கூப்பிடும்.. உப்பை மட்டுமே ஓயாமல் சாப்பிடும்”

– கவிஞர் சுரதா

The golden sunrise

வானத்தின் அழகு

அளவிட முடியாதது, அலகிட முடியாதது வானம். இந்த
வானத்தில் தான் எத்தனை அழகுகள். பகலில் ஞாயிறு. இரவில்
நிலா, விண்மீன்கள் கூட்டம், மேகங்களின் ஊர்வலம். இத்தனையும்
கொண்டுள்ள இந்த வானத்தின் அழகினை, மாலை நேரத்தில்
பார்த்தால், உள்ளத்தை அள்ளுகின்ற காட்சியாக இருக்கும். இந்தக்
காட்சி தரும் இன்பத்தை – அழகினைத் தம் பாடலில்
வெளிப்படுத்துகிறார் பாரதிதாசன்.

குன்றின் மீது நின்று கண்டேன்,
கோலம்! என்ன கோலமே !
பொன் ததும்பும் அந்தி வானம்

காற்று, தீ, நீர், ஞாயிறு, நிலவு போன்ற உலக இயக்கத்தின்
அடிப்படைக் கூறுகளை வழங்கிய வானத்தின் சிறப்பை எண்ணி
எண்ணி வியப்படைகிறார்.

விரிந்த வானே, வெளியே – எங்கும்
விளைந்த பொருளின் முதலே
திரிந்த காற்றும், புனலும் – மண்ணும்,
செந்தீ யாவும் தந்தோய்
தெரிந்த கதிரும் நிலவும் – பலவாச்
செறிந்த உலகின் வித்தே,
புரிந்த உன்றன் செயல்கள் – எல்லாம்
புதுமை ! புதுமை ! புதுமை !

அழகர் கோவில், மதுரை (alagar kovil, Madurai)

வணக்கம்,

http://mathuraikkaaran.blogspot.in/2010/06/blog-post.html

மேல்க்கண்ட வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்ட விளக்கம்..

மதுரையின் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த கோவில் அழகர் கோவில். மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருகின்றது அழகர் மலை. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை “திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி” முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. இரண்டு அழகர் தலங்களை அழகர் மலை கொண்டுள்ளது. ஒரு அழகன் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் அழகர்(கள்ளழகர்). மற்றொருவர் மலைமீது குடிகொண்டுள்ள தமிழ் அழகன் முருகன். ஆம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை(சுட்ட பழம்) அழகர் மலையில் உள்ளது.அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது.அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.

மலை மீது சென்றால் பழமுதிர்சோலையையும் முருகன் சந்நிதானத்தையும் காணலாம். மிக அழகான அமைதியான ஒரு இடமாகும். பழமுதிர்சோலையை அடுத்து ஒரு மூலிகை வனம் உண்டு. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த வனத்தில் பல அரிய மூலிகைகளை பராமரித்து வருகிறார்கள். இங்கே மரக்கன்றுகளை வாங்கலாம். இன்னும் சிறிது தூரம் சென்றால் அழகர் தீர்த்தம் என்றழைக்கப்படும் நூபுர கங்கை இருக்கிறது. என்றும் வற்றாத இந்த நீரானது கங்கை நீரை விட புனிதமானதாகக் கருதப்படுகிறது. மலைகளின் வழியாக வருவதால் பல்வேறு மூலிகை கடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவத்தன்மை உடையது என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் குளிப்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கே ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து இங்கே செல்வதற்கு வாகன வசதி கோவில் நிர்வாகத்தால் அளிக்கப்படுகிறது.

அழகர் மலையில் கடவுள்களை காண்கிறோமோ இல்லையோ, நமது முன்னோர்கள் நிறையபேரைக் காணலாம். மலை முழுதும் குரங்குகள் தான். கையிலே உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல முடியாது. உரிமையுடன் பிடுங்கிக்கொள்வார்கள். மூலிகை வனத்திற்கு பக்கத்தில் ஒரே மரத்தில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்களைக் காணலாம். பச்சை பசேலென்று இருக்கும் அழகர் கோவில் மதுரை இளைஞர்களின்(காதலர்களின்) முக்கிய சுற்றுலாத்தளமாக உள்ளது.

நன்றி மதுரைக்காரன் அவர்களே.. நானும் மதுரைக்காரன் தான்.. 🙂